கின்னஸ் சாதனைக்காக இலங்கை இரட்டையர்களினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி!

Report Print Murali Murali in சிறப்பு

கின்னஸ் உலக சாதனைக்காக இலங்கையர்களால் இன்று புதுவித முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், உலகின் அதிகமான இரட்டையர்களின் ஒன்று கூடலின் மூலம் இந்த கின்னஸ் உலக சாதனையை நிலைநாட்ட இலங்கை இரட்டையர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கான நிகழ்வு கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்றிருந்தது. இதில் வயது வித்தியாசம் இன்றி இரட்டையர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த போட்டியில் கலந்துகொள்ள பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்பு சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதியுடன் இன்று காலை 10 மணிக்கு முன்னதாக வருகைத்தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன், 18 வயதுக்கு குறைந்த இரட்டையர்கள் தமது தாய் அல்லது தந்தையின் தேசிய அடையாள அட்டையின் பிரதி ஒன்றை கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இலங்கையின் புகழை உலகுக்கு கொண்டு செல்ல நாடு முழுவதும் உள்ள இரட்டையர்கள் முன்வரவேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தே இந்த நிகழ்வை ஒழுங்கு செய்ததாக இலங்கை இரட்டையர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தந்தெனிய தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers