கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள திட்டம்!

Report Print Murali Murali in சிறப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் விசேட ஸ்கேனர் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சீனாவில் பரவிவரும் கெரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பயணிகளை அடையாளம் காணும் வகையில் ஸ்கேனர் இயந்திரங்களை பயன்படுத்தி பரிசோதனை நடத்தப்படவுள்ளன.

இந்த வைரஸ் தொடர்பில் இலங்கையை உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

ஆகவே, இது தொடர்பில் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக விமான நிலைய நிர்வாகம் இந்த ஸ்கேனர் முயற்சியை நடத்துகின்றது.

சீனாவின் வுஹன் மாநிலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...