மாகாண ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதி திட்டம்! பிரதமர் மஹிந்த அறிவிப்பு

Report Print Ajith Ajith in சிறப்பு

மாகாண ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதி திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதனை இன்று அறிவித்துள்ளார்.

அத்துடன் ஊடக நிறுவனங்களுடன் பேசி மாகாண ஊடகவியலாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகளை கிரமமாக வழங்கும் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் இன்று தம்மை சந்தித்த இலங்கை பத்திரிகை சம்மேளனத்தின் மாத்தளை மாவட்ட உறுப்பினர்களிடம் இந்த விடயங்கள் குறித்து மஹிந்த ராஜபக்ச உரையாடினார்.

தமது நாடாளுமன்ற விஜயத்தின் ஒரு கட்டமாகவே மாத்தளை செய்தியாளர்கள் இன்று பிரதமரை சந்தித்தனர்.

இதேவேளை கடந்த தேர்தல்களின்போதும் மஹிந்த ராஜபக்சவினால் ஊடகவியலாளர்களுக்கு பல உதவி திட்டங்கள் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Latest Offers

loading...