வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்! 24 மணி நேர தொடர்பு இலக்கம் அறிமுகம்

Report Print Murali Murali in சிறப்பு

24 மணி நேரமும் தொடர்புகொள்ளும் வகையில், சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி, 0086-10-65321861/2 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முடியும் என சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் பெருமளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

தற்போது, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும், கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அதிகாரபூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலும், குறித்த வைரஸ் நோயால் பீடிக்கப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வர், IDH வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த இருவரும் அடங்குகின்றனர். இந்நிலையில், சீனாவில் பெருமளவான இலங்கை மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இவர்கள் அனைவரையும் 48 மணி நேரத்திற்குள் இலங்கைக்கு மீள அழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையிலேயே, 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில், சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.