கொரோனா வைரஸ் தாக்கம்! இலங்கையிலிருந்து சீன பிரஜைகளை வெளியேற்ற நடவடிக்கை

Report Print Ajith Ajith in சிறப்பு

கொரோனா வைரஸ் பரவுகையை அடுத்த 48 மணித்தியாலங்களில் சீன பிரஜைகள் 150 பேர் நாட்டில் இருந்து சீனாவுக்கு திருப்பியனுப்பப்படவுள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

இதற்காக Srilankan Airlines இன் விசேட விமானம் ஒன்று பயன்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் வெளியுறவுத்துறை மேலதிக செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று மாலை சீன பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வுஹான் நகரில் தங்கியிருந்த 65 இலங்கை மாணவர்களும் இன்று மாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers