இலங்கையில் பிரமாண்டமான கோயில் ஒன்றை அமைக்க திட்டமிடும் இந்தியா

Report Print Banu in சிறப்பு

இலங்கையில் பிரமாண்டமான சீதா அம்மன் கோயில் ஒன்றை அமைக்க இந்தியா முன்வந்துள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் அரசு இன்று இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கு முன்னர் சிவ்ராஜ் சிங் சவுகானின் கீழ் இந்தியாவின் முந்தைய பாஜக அரசாங்கத்தால் இந்த யோசனை உருவாக்கப்பட்டது.

ஆனால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. 2018 டிசம்பரில் ஆட்சி மாற்றப்பட்ட பின்னர், முந்தைய ஆட்சியால் இந்த திட்டத்தின் எந்த கோப்புகளும் நகர்த்தப்படவில்லை என்று காங்கிரஸ் அரசு கூறியது.

சட்டம் மற்றும் மத விவகார அமைச்சர் பி சி ஷர்மா தலைமையிலான தூதுக்குழு சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தது.

இலங்கையைச் சேர்ந்த நாடாளுமன்ற அதிகாரிகள் மற்றும் மகாபோதி சபை உறுப்பினர்கள் அடங்கிய குழு கோயிலைக் கட்டுவதற்கு விரைவில் அமைக்கப்படும் என்றும் நடப்பு நிதியாண்டில் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உத்தேச கோயிலின் தளம் இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள திவுரம்பொலவில் உள்ள ஒரு பௌத்த மடாலய வளாகத்தில் அமைந்துள்ளது.

சீதா அணிந்திருந்த ஆபரணங்கள் இன்னும் அங்கே புதைக்கப்பட்டுள்ளன என்று உள்ளூர் மக்கள் நம்புவதாக கூறப்படுகிறது.