விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு மே 18, 19, 20இல் விசாரணை!

Report Print Rakesh in சிறப்பு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 18, 19, 20ம் திகதிகளில் விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இவ்வாரு வழக்கு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது.

ஏற்கனவே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சட்டத்துக்கு முரணானது என அவர் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை ஆட்சேபத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

அதன்போது வழக்கு விசாரணைக்கு திகதியிட்ட போதும், வழக்கின் 2ம் பிரதிவாதியான அனந்தி சசிதரனின் சட்டத்தரணி வழக்கிலிருந்து விலகிக்கொள்வதாக இடையீட்டு மனுவூடாக அறிவித்த நிலையிலேயே இன்று மீளத் திகதி குறிக்கப்பட்டது.