கொழும்பில் கொரோனா வைரஸ் தாக்கியதா? வெளியாகியுள்ள தகவல்

Report Print Murali Murali in சிறப்பு

கொழும்பிலுள்ள உலக வர்த்தக மையத்தில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதில் வீழ்ந்து கிடந்ததாக தெரிவிக்கும் காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.

வர்த்தக மையத்தில் நபர் ஒருவர் விழுந்துகிடந்த நிலையில் அதிகாரிகளால் தூக்கி செல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொளி வெளியாகியிருந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே சீன பெண் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றதால் சற்று பரபரப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து யாரும் அச்சமடைய தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.