கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

Report Print Ajith Ajith in சிறப்பு

கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்கள் தேவையற்ற பீதி கொள்ளத்தேவையில்லை என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் துறையின் ஆலோசகர் வைத்திய கலாநிதி தீபா கமகே தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

ஒரு மருத்துவ தேவையை தவிர்ந்த நிலையில் அனைவரும் முகக்கவசம் அணிய தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்டவர்களுக்கு இடையில் குறித்த தூரத்தில் நின்று செயற்படுவது, முத்தம் கொடுப்பதை தவிர்ப்பது, உமிழ்நீர் பரவாமல் இருப்பது போன்ற நிலைமைகளின்போது கொரோனா வைரஸ் தொற்றாது.

இந்தநிலையில் தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு அறிவிக்கும் என்றும் தீபா கமகே குறிப்பிட்டுள்ளார்.

கொனோரா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசத்தை அணியவேண்டும்.

சந்தையில் விற்பனையாகும் அறுவைச்சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அழித்துவிடக்கூடிய முகக்கவசங்களை 8 மணித்தியாலங்கள் மாத்திரமே அணியமுடியும்

8 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் அணிந்தால் அது வேறு வகையான வைரஸ் பாதிப்புக்கு வழிவகுத்துவிடும் என்றும் தீபா கமகே தெரிவித்துள்ளார்.

Latest Offers