கொரோனா பீதி! பிளாஸ்டிக் கொள்கலன்களில் தலையை மூடிய இலங்கையர்கள்

Report Print Murali Murali in சிறப்பு

கொரோனா வைரஸிற்குப் பயந்து முகக் கவசம் இல்லாத நிலையில் பிளாஸ்டிக் கொள்கலன்களில் முகங்களை மூடிச்சென்ற சம்பவம் ஒன்று குருநாகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்த தகவல்களை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சமன் ரத்னப்பிரிய வெளிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் கூறினார்.

கொரோனா வைரஸ் சீனா, அமெரிக்க, ஜப்பான், கொரியா, அவுஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்த வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் 170 பேர் வரையில் பலியாகியுள்ளதுடன், 7000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


you may like this video

Latest Offers

loading...