இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீன பெண்ணின் தற்போதைய நிலை!

Report Print Ajith Ajith in சிறப்பு

கொரோன வைரஸினால் பாதிக்கப்பட்ட சீன பெண் உடல்நிலை தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுற்றுலா வந்த நிலையில் அவர் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது உடல் நிலை தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் அவர் விரைவில் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இந்த தொற்று இருக்கலாம் என்று சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வரும் மேலும் 12 பேருக்கு கொரோன வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


you may like this video

Latest Offers

loading...