சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டையில் வெற்றி பெற்ற இலங்கை வீரர்களுக்கு கௌரவிப்பு

Report Print Thileepan Thileepan in சிறப்பு

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டையில் பங்குபற்றி பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் இன்று இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டையில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களை பெற்ற எஸ்.சஞ்சயன், பி.ராகுல் மற்றும் வெள்ளிப் பதக்கம் பெற்ற ரி.நாகராஜா ஆகிய மாணவர்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார், கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.மரியநாயகம், உடற்கல்வி உதவி பணிப்பாளர் கெ.யூட் பரதமாறன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers