இலங்கையில் உள்ள சீன நாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு!

Report Print Ajith Ajith in சிறப்பு

சீனாவின் வதிவிட விசாவை கொண்டுள்ள நிர்மாணத்துறையினருக்கு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் இன்று அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

தமது பணியாளர்களின் நடமாட்டத்தை நிர்மாண பிரதேசத்துக்குள்ளும், வசிப்பிடங்களுக்குள்ளும் கட்டுப்படுத்துமாறு அவர் தமது அறிவுறுத்தலில் கோரியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவியுள்ள சீனாவில் இருந்து பல பணியாளர்கள் அண்மையில் வந்துள்ளமையை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இரண்டு வாரங்களின் பின்னரே அதற்கான குணங்குறிகள் தென்பட தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 18 நாடுகளில் 9000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this video

Latest Offers

loading...