சீனாவிற்கு சென்ற ஸ்ரீலங்கன் எயார் விசேட விமானம் வுஹானில் தரையிறங்கியது!

Report Print Ajith Ajith in சிறப்பு

சீனாவின் வுஹான் நகரில் நிர்க்கதி நிலையில் உள்ள இலங்கை மாணவர்களை ஏற்றி வருவதற்கான ஸ்ரீலங்கன் எயார் விசேட விமானம் வுஹானில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை கட்டுநாயக்காவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் சற்று அங்கு தரையிறங்கியுள்ளது.

இந்த விமானத்தில் இலங்கையின் 33 மாணவர்களும் அவர்களின் உறவினர்களும் அழைத்து வரப்படவுள்ளனர்.

இவர்கள் இன்று நள்ளிரவு அளவில் இலங்கை வந்தடைந்ததும் நேரடியாக தியத்தலாவ இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட சிகிச்சை அறைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளனர்.

இதன்பின்னர் அவர்களிடம் இருந்து வெளியாகும் அறிகுறிகளை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


you may like this video

Latest Offers

loading...