கொரோனா வைரஸ் தாக்கம்! 259 பேர் பலி

Report Print Ajith Ajith in சிறப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 259ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 46 பேர் அந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று சீன அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அமெரிக்கா உட்பட்ட பல நாடுகள் சீனாவில் தங்கியிருந்தவர்களுக்கு புதிய எல்லை கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

சீனாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள ஹூபாய் மாகாணத்தில் வீதிகள் யாவும் வெறிச்சோடியுள்ளன. பொதுபோக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

வர்த்தக நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழுவின் தகவல்படி புதிதாக 2102 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையும் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11791 ஆகும். 2002-03இல் சீனாவில் சார்ஸ் தொற்று ஏற்பட்டபோது அதில் 800 பேர் வரை உயிரிழந்தனர்.

8000 பேர் வரை பாதிக்கப்பட்டனர். பீஜிங்கிலும் பொதுமக்கள் யாவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமையை அடுத்து இதுவரை பல நாடுகளிலும் இருந்து சீனாவுக்கு 10 ஆயிரம் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 250 நாடுகளின் பிரஜைகள் சீனாவில் இருந்து வெளியேறியுள்ளனர்.

வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமையை அடுத்து ஹூனாகங் பிரதேசத்தில் உள்ள 7.5 மில்லியன் மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி எந்தவொரு பணிக்காகவும் ஒரு வீட்டில் ஒருவர் மாத்திரமே வீட்டில் இருந்து வெளியில் சென்று திரும்பமுடியும்.

டீயான்ஜின் மாகாணத்தில் 15 மில்லியன் மக்கள் உள்ள நிலையில் அங்கு அனைத்து நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

இதேவேளை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவின் பொருளாதாரத்தில் தற்காலிக தாக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் அது சீர்செய்யப்படும் என்று அந்த நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.