சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை சம்பியனாக தெரிவு!

Report Print Thileepan Thileepan in சிறப்பு

கண்டியில் பத்து நாடுகள் கலந்து கொண்ட கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் அதிக பதக்கங்களை பெற்று இலங்கை சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கண்டியில் பத்து நாடுகள் கலந்து கொண்ட சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வருகின்றன.

இலங்கை சவாட் கிக்பொக்சிங் குத்துச்சண்டை அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவரும், சர்வதேச கிக்பொக்சிங் பயிற்றுவிப்பாளருமான சி.பூ. பிரசாத் விக்ரமசிங்க தலைமையில் இலங்கையில் முதல் முதலாக சர்வதேச நாடுகள் கலந்துகொண்டு கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டிகள் இடம்பெற்றிருந்தது.

குறித்த போட்டி நிகழ்வு கண்டி - நாவலப்பிட்டியில் ஜயந்த விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் நடைபெற்றுள்ளது.

இக்குத்து சண்டை போட்டியில், பிரான்ஸ், சிங்கப்பூர்,கனடா, இந்தியா, பாக்கிஸ்தான், பெல்ஜியம், ஆப்கானிஸ்தான், பல்கேரியா, எகிப்து மற்றும் இலங்கை உட்பட பத்து நாடுகள் பங்குபற்றியிருந்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாவலப்பிட்டி மாநகரசபையின் மேயர் .சசங்க சம்பத் கலந்துகொண்டு வெற்றி பெற்று வீரர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்துள்ளார்.

வடமாகாணத்தை பிரதிபலித்து கிக்பொக்சிங் பயிற்றுவிப்பாளர் எஸ். நந்தகுமார் தலைமையில் சென்ற 20 வீரர் மற்றும் வீராங்களைகள் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு 17 தங்கப்பதக்கங்களையும், 02 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்று நாட்டிற்கும், வட மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இதன்மூலம் இப்போட்டியில் அதிக பதக்கங்களை பெற்ற இலங்கை முதலாம் இடத்தை பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன், இரண்டாம் இடத்தை இந்தியாவும், முன்றாம் இடத்தை பிரான்சும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers