மீண்டும் பிரித்தானியாவிற்கே திருப்பி அனுப்பப்படும் கழிவுகள்?

Report Print Ajith Ajith in சிறப்பு

இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவுக்கு அனுப்ப இலங்கை மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் இணங்கியுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

இந்த கழிவுப்பொருட்கள் தற்போது கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளன

இவற்றை பிரித்தானியாவுக்கு திருப்பியனுப்பும் கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்

இந்த கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் அவற்றுக்கு எதிராக எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன.

எனினும் இந்த கழிவுகள் வேறு ஒரு நாட்டுக்கு மீளஏற்றுமதி செய்வதற்காகவே இறக்குமதி செய்யப்பட்டதாக இறக்குமதியாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers