சவேந்திர சில்வாவை அனுமதிக்க மறுத்துள்ள அமெரிக்கா! சர்வதேச குற்றவியல் விசாரணையாளர்களுக்கும் அனுமதி மறுப்பு

Report Print Ajith Ajith in சிறப்பு
410Shares

இலங்கையின் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை தமது நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துள்ள அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் தமது படைகளின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக வரவிருந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையாளர்களையும் தமது நாட்டுக்குள் வர அனுமதிக்கவில்லை.

இந்த செய்தியை ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ளது.

மனித உரிமைமீறல்கள் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான கொலைகள் என்பவற்றுக்கு பொறுப்புக்கூறவேண்டும் என்ற அடிப்படையிலேயே சவேந்திர சில்வாவை நாட்டுக்குள் வரக்கூடாது என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேநேரம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் மேற்கொண்டதாக கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிக்கவென அமெரிக்காவுக்கு வரவிருந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்கும் அமெரிக்கா வீசா வழங்க மறுத்துவிட்டது.

இது ஏற்கனவே இடம்பெற்ற சம்பவம் என்று இணையம் சுட்டிக்காட்டியுள்ளது. 2009ம் ஆண்டு இறுதிப்போரின்போது 58வது படையணிக்கு தலைமை தாங்கிய சவேந்திர சில்வா போர்க்குற்றம் புரிந்தவர்கள் என்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன.

இதனை ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய நிறுவனங்களும் உறுதிசெய்துள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை 2016- 2017 காலப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் 27 கைதிகளை சித்திரவதை செய்தததாகவும் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காகவும் விசாரணை நடத்துவதற்காகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையாளர்கள் அமெரிக்காவுக்குள் வர அனுமதிக்கோரியிருந்தனர்.

எனினும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்கு ஒத்துழைக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர் ஜோன் போல்ட்டன் தெரிவித்ததாகவும் ஆங்கில இணையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சார்பான கருத்துக்களை நியாயப்படுத்தும் முகமாகவே இந்த செய்தியை குறித்த இணையத்தளம் பிரசுரித்துள்ளது.