இலங்கைக்கு இராஜதந்திர வெற்றி! இராணுவ தளபதி தெரிவிப்பு

Report Print Murali Murali in சிறப்பு
681Shares

உயிர்கொல்லி நோயாக கருதப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சீனாவில் சிறைப்பட்டிருந்த இலங்கை மாணவர்களை மீட்டு வந்ததோடு அவர்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்​தமை இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர ரீதியான வெற்றியென இராணுவ தளபதி லெப்டினன் ​ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தியதலாவையில் உள்ள இராணுவ வைத்திய சாலையில் தங்க வைக்கப்பட்டு இவர்களுக்கு சிகிச்சை அளித்த இராணுவ குழுவினருக்கும் அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

சீனா வுஹான் பிரதேசத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து அப்பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை மாணவர்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைப் பணிக்கான ஒத்துழைப்பை வழங்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய துறையினறுக்கு நன்றிகளைத் தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வானது ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இராணுவத் தலைமையைகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“சிறந்த வீரர்களாக அனைவரும் பலவாறான உயிர் அச்சுறுத்தல்கள் இடர்பாடுகள் போன்றவற்றிற்கு மத்தியில் தங்களது உயிர்களைப் பணயம் வைத்து செயற்பட்டனர் .

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் எமது நாட்டில் இடம்பெற்ற ஒரு சிறந்த செயற்பட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இது காணப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


you may like this video