பிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்! காரணம் இதுதான்

Report Print Murali Murali in சிறப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று பிரித்தானியாவில் மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், New Molden, Kentan போன்ற இடங்களில் நடைபெறவிருந்த மக்கள் சந்திப்புக்களில் சுமந்திரன் கலந்துகொள்ளவில்லை. இதனால், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றை இளைஞர்கள் கோபமடைந்துள்ளனர்.

இன்றைய அரசியல் சூழ்நிலைகள் பற்றிய தெளிவைக் கேட்டறிந்துகொள்வதற்காக தாம் அங்கு சென்றிருந்த போதும், சுமந்திரன் மக்களைச் சந்திக்க வராதது தமக்கு கவலை அளிப்பதாக அங்கு வந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

சுமந்திரன் தொடர்பான தமது கருத்துக்களை, நிகழ்வு நடைபெற இருப்பதாகக் கூறப்பட்டிருந்த கட்டடத்தில் அவர்கள் எழுதிவிட்டும் சென்றிருந்தார்கள்.

இந்த சந்திப்புத் தொடர்பாககூட்டமைப்பின் லண்டன் கிளையிடம் கேட்டபொழுது,

இந்தச் சந்திப்பு தமது கிளையினால் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், தனிப்பட்ட இருவரினாலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.