கொரோனா வைரஸை குணப்படுத்தலாம்? பண்டாரநாயக்க சர்வதேச ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

Report Print Murali Murali in சிறப்பு

கொரோனா வைரஸுக்கு சாத்தியமான சிகிச்சை அளிக்க முடியும் என பண்டாரநாயக்க சர்வதேச ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது.

எனினும், இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளி இல்லாத காரணத்தினால் அவர்களால் அதை சோதனை செய்ய முடியவில்லை என் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

டெங்கு மற்றும் பிற தொற்று நோய்கள் போன்ற வைரஸ்களை குணப்படுத்த பயன்படும் தற்போதைய ஆயுர்வேத மருந்துகள் நோயாளியின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுவதால், கொரோனா வைரஸை குணப்படுத்த உதவக்கூடும் என அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு தெரிவித்துள்ளனர்.

சீனாவில் உள்ள தங்கள் குடும்பங்களை எச்சரிக்கும் பொருட்டு தேவையான ஆயுர்வேத மருந்துகளைப் பெறுவது தொடர்பாக இலங்கையில் உள்ள சில சீனர்கள் ஏற்கனவே இந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

இலங்கையின் ஆயுர்வேத மருந்துகள் கொரோனா வைரஸை குணப்படுத்த உதவக்கூடும் என்று குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சகம், இந்த மருந்துகள் குறித்து மேலும் ஆராய்ச்சி செய்து அரசுக்கு தெரிவிக்க இலங்கை ஆயுர்வேத மருத்துவ நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது, ​​இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள், தொற்று நோய் மருத்துவமனையில் 2 பேரும், குருநாகல் போதனா மருத்துவமனையில் ஒருவருமாக சிகிச்சையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூவரில் இருவர் வெளிநாட்டினர் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.