கொரோனா வைரஸ் தாக்கம்! இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சீன பெண் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Report Print Ajith Ajith in சிறப்பு

இலங்கைக்கு சுற்றுலா பயணியாக வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த சீனப் பெண் நாளை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

இந்த தகவலை அங்கொடை தொற்று நோய் மருத்துவமனையின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இவர் முழுமையாக குணமாகிய நிலையிலேயே நாளை விடுவிக்கப்படவுள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வுஹான் மாகாணத்தில் இருந்து ஜனவரி 19ம் திகதி இலங்கைக்கு வந்த அவர் ஜனவரி 25ம் திகதியன்று கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டார்.

இதன் பின்னர் தொடர்ச்சியாக அவருக்கு மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இவரே இலங்கையில் இதுவரை கொரோனவைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று ஒருவராக இருந்து வருகிறார்.

இந்தநிலையில் பூரண குணமான நிலையில் அவர் நாளை விடுவிக்கப்படவுள்ளார்.


you may like this video