விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை வைத்திருப்பது குற்றமல்ல! வெளிநாட்டு நீதிமன்றம் உத்தரவு

Report Print Steephen Steephen in சிறப்பு

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட 12 பேருக்கு எதிராக அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நீக்க மலேசிய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.

சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்காது இருக்க பலமான காரணங்கள் இருப்பதாகவும் இவர்கள் எதிர்நோக்கும் 34 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இவர்களில் எவருக்கும் தண்டனை வழங்குவதற்கான யதார்த்தமான எதிர்பார்ப்பு இல்லை எனவும் சட்டமா அதிபர் டன்ஸ்ரீ டெமி தோமஸ் தெரிவித்துள்ளார்.

மலேசிய சமஷ்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 145(3) ஷரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி தனது விருப்பத்திற்கு அமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக மலேசிய சட்டமா அதிபர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பொப் இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது நடிகர் மற்றும் நடிகைகள் மாத்திரமல்ல, வரலாற்று நாயகர்கள், அரசியல்வாதிகள் பெரும்பாலும் மக்களின் கௌரவத்திற்கு பாத்திரமானவர்கள்.

ஒருவர் தனது செல்போனில் அல்லது பேஸ்புக்கில் படங்களை வைத்திருப்பது வேறு பிரதிநிதித்துவங்களை வைத்திருப்பது பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக ஆகாது.

இப்படியான நடவடிக்கை குற்ற நடவடிக்கை என்றால், அது சட்டத்தை இழிவுக்கு உள்ளாகும்.

இப்படியான புகைப்படங்களையோ பிரபாகரனின் புகைப்படங்களை வைத்திருப்பது, பகிர்ந்தளிப்பது, அவற்றை காட்சிப்படுத்துவதன் மூலம் இந்த 12 பேரில் ஒருவரை கூட பயங்கரவாத செயலுடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்று முறைப்பாடு செய்ய முடியாது. குற்றவியல் தண்டனை சட்டத்தின் 130 பீ(4) அவற்றை வெறுமனே வாதிடுதல், எதிர்ப்பு அல்லது கருத்து வேறுபாடு என்று மட்டுமே கூறுகிறது என மலேசிய சட்டமா அதிபர் டான்ஸ்ரீ டெமி தோமஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 12 பேரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தனர் என்று குற்றம் சுமத்தி கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். அன்று முதல் இவர்கள் 12 பேரும் 2012 பாதுகாப்பு குற்றம் தொடர்பான சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவிருந்தது.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு மாநில சட்ட மன்ற உறுப்பினர்களான பி. குணசேகரன், ஜி. சாமிநாதன் உட்பட 12 பேர் அடங்குகின்றனர்.


You may like this video...