உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல் குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்!

Report Print Murali Murali in சிறப்பு

கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் மாலைதீவு பிரஜைகள் நால்வர் இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நால்வரையும் கைது செய்ய குற்றப் புலனாய்வு பிரிவினரின் தனிப்படையொன்று சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபர்களில் இருவரை அடையாளம் கண்டுள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர், சர்வதேச பொலிஸாருடன் இணைந்து அவர்களை கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், ஏனைய இருவர் குறித்த தகவல்களையும் சர்வதேச பொலிஸாரின் தகவல் கட்டமைப்பு ஊடாக பகிர்ந்து தேடி வருவதாக தகாவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நான்கு மாலை தீவு பிரஜைகளும் கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காலத்தில், அல்லது அதனை அண்மித்த நட்களில் இந்த தாக்குதல்களை முன்னெடுத்த சஹ்ரானின் பயங்கரவாத கும்பலுடன் மிக நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளமை தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...