875 மில்லியன் ரூபாஉடனடியாகத் தேவை- யாழ். மாவட்ட செயலர் கோரிக்கை

Report Print Rakesh in சிறப்பு

“யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை முழுமைப்படுத்தல் உள்ளிட்ட அவசர அபிவிருத்திப் பணிகளுக்கு உடனடியாக 875 மில்லியன் ரூபா தேவை.”

இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் க.மகேசன் கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போர் முடிவுக்கு வந்த 2009ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசின் நிதியில் 8 ஆயிரத்து 600 வீடுகளும், இந்திய அரசின் நிதியில் 6 ஆயிரத்து 800 வீடுகளுமாக 15 ஆயிரத்து 400 வீடுகள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இன்னமும் 19 ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றன. அதிலும் 5 ஆயிரத்து 700 வீடுகள் உடனடியாகத் தேவை.

மேலும், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டப் பணிகளை முழுமைப்படுத்த 475 மில்லியன் ரூபா உடனடியாகத் தேவை" - என்றார்.

Latest Offers

loading...