இந்திய பாலியல் வர்த்தக முகவர்களுக்கு விற்பனை செய்யப்படும் இலங்கை பெண்கள்!

Report Print Ajith Ajith in சிறப்பு

இலங்கையின் பெண்கள் இந்திய பாலியல் வர்த்தக முகவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை குடிவரவுத்திணைக்களத்தின் கீழ் வரும் எல்லைக்கண்காணிப்பு பிரிவு இதனை கண்டறிந்துள்ளது.

கடந்த 20ம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இந்தியர் ஒருவரையும் இரண்டு இலங்கை பெண்களையும் கைது செய்து விசாரணை செய்தபோதே இந்த செயற்பாடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண்கள் இருவரின் வாக்குமூலங்களின்படி நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற அடிப்படையில் கொழும்பில் உள்ள இடம் ஒன்றில் பெண்கள் தங்கவைக்கப்படுகின்றனர்.

இதன்பின்னர் எச்.ஐ.வி பரிசோதனையின் பின்னர் அவர்கள் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இதேவேளை இந்த சம்பங்களின் பின்னணியில் இந்திய பெண்ணை திருமணம் செய்துள்ள இலங்கையர் ஒருவர் செயற்படுவது தெரியவந்தது.

இதனையடுத்து அவர் கடந்த 21ம் திகதி கைதுசெய்யப்பட்டார். அவருடன் மற்றும் ஒரு இந்தியரும் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.