அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு!

Report Print Ajith Ajith in சிறப்பு

அதிகரித்துச்செல்லும் மரக்கறிகளின் விலையை கட்டுப்படுத்தி நுகர்வோரையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்

மரக்கறிகளின் விலை உயர்வு காரணமாக வாழ்க்கைசெலவு அதிகரித்து செல்வது தொடர்பாக இன்று ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது மரக்கறிகள் பல்வேறு இடங்களில் இருந்து தம்புள்ளைக்கு கொண்டு வரப்படுகின்றன. பின்னர் அதே மரக்கறிகள் உற்பத்தி இடங்களுக்கு விற்பனைக்காக விநியோகிக்கப்படுகின்றன.

இது சரியான நடைமுறையல்ல ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பொருளாதார மையங்கள் சிறு வியாபாரிகளையும், நுகர்வோரையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்டபோதும் அவை இன்று பாரிய தொகை வர்த்தகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதையும் ஜனாதிபதி குறிப்பிட்டார்