ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43வது கூட்டதொடர் ஆரம்பமானது!

Report Print Ajith Ajith in சிறப்பு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 43வது அமர்வு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அமர்வு வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ளது.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன எதிர்வரும் புதன்கிழமையன்று அமர்வில் உரையாற்றவுள்ளார்.

இதேவேளை இன்றைய அமர்வின்போது ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலர் அன்டனியொ குட்டரஸ், மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செய்ல் பெச்சலெட், தலைவர் டிஜானி மஹ்மட் பண்டோ ஆகியோர் உரையாற்றினர்.

குட்டரஸ் தமது உரையில் மனித உரிமைகள் ஒரு மனிதனின் கௌரவம் மற்றும் மனிதத்துவத்தை பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார்.

மனித உரிமைகளே இறுதியாக சமூகத்தின் விடுதலைக்கான ஆயுதமாகும்.

அத்துடன் பெண்கள் சிறுமிகளுக்கான சமவுரிமையை உறுதிப்படுத்தல், நிலையான அபிவிருத்தி, வன்முறைகளை தடுத்தல், மனித அவலங்களை குறைத்தல் மற்றும் நியாயமான உலகை அமைத்தல் என்பனவும் மனித உரிமைகளாகும் என்று குட்டரஸ் குறிப்பிட்டார்.

43வது மனித உரிமைகள் பேரவை அமர்வு எதிர்வரும் மார்ச் 20வரை நடைபெறவுள்ளது.