தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு குற்றச்சாட்டு: மலேசியாவில் எஞ்சியிருந்த இரண்டுபேரும் விடுதலை

Report Print Ajith Ajith in சிறப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பை கொண்டிருந்தனர் என்று குற்றம் சுமத்தப்பட்டு மலேசியாவில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் இறுதி இரண்டுபேரும் இன்று விடுவிக்கப்பட்டனர்.

மலேசியாவின் சட்டமா அதிபர் இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விலக்கிக்கொண்ட நிலையில் இவர்கள் இருவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

ஏற்கனவே கடந்த வாரத்தில் குற்றச்சாட்டு விலக்கப்பட்டநிலையில் 10 பேர் விடுவிக்கப்பட்டனர். இவர்களை விடுவிக்கும் உத்தரவை மேல்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் விடுத்தனர்.

இவர்களில் ஒருவர் வர்த்தகரான 58 வயதான பி.சுப்பிரமணியம் என்றும் மற்றும் ஒருவர் 27வயதான களஞ்சியப்பொறுப்பாளரான தங்கராஜா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை இவர்களை விடுதலை செய்யுமாறு பரிந்துரை செய்தமையை அடுத்து மலேசிய சட்டமா அதிபருக்கும் உள்துறை அமைச்சருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது