தமிழர் இயக்கத்தின் சார்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட நிஷா பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 43வது அமர்வு கடந்த 24ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியது. இந்நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அமர்வு இன்று நடைபெற்றது.
இலங்கையின் சார்பில் ஜெனிவா பேரவையில் இன்று உரையாற்றிய அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கையானது 2015ம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து விலகிக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில், லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.