நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்வது தொடர்பான அறிவிப்பு 2ம் திகதி வெளியாகும்!

Report Print Ajith Ajith in சிறப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீதித்துறை தொடர்பாக தொலைபேசியில் கலந்துரையாடியதாக சட்டமா அதிபரினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்வது தொடர்பான தீர்மானத்தை நுகேகொட நீதிவான் நீதிமன்றம் மார்ச் 2ம் திகதி அறிவிக்கவுள்ளது.

தம்மை கைதுசெய்வதை தடுக்கும் வகையில் நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய தாக்கல் செய்த இடைக்கால தடையுத்தரவு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

நீதிமன்றம் உத்தரவில்லாமல் கிஹான் பிலப்பிட்டியை கைதுசெய்ய நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை விதித்திருந்தது.

நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய கடந்த ஜனவரி மாதத்தில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.