சிறையிலிருந்து வெளியே வந்த ரஞ்சன் மதுப் போத்தல்களுடன்! - காணொளி வெளியீடு

Report Print Rakesh in சிறப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 44 நாட்களுக்குப் பின் வெலிக்கடைச் சிறையிலிருந்து பிணையில் வெளியில் வந்த நிலையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் மாதிவெல பகுதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்று விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

மதுப் போத்தல்களுடன் இருப்பது போன்ற காணொளியை இவர் வெளியிட்டுள்ளார்.

இதன்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தான் அனுபவித்த கசப்பான உண்மைகளையும் பல தகவல்களையும் இதில் விபரிக்கின்றார்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மது விருந்து ஒன்றை வைத்து அதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


you may like this video