அரச திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! முறைப்பாடு செய்வதற்கான காலம் நீடிப்பு

Report Print Murali Murali in சிறப்பு

2015 ஜனவரி 8 முதல் 2019 நவம்பர் 16 வரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கள்களுக்கு உள்ளான சம்பவங்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முறைப்பாடுகளை செய்வதற்கான காலத்தை நீடித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 6ம் திகதி வரையில் முறைப்பாடுகளை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஆணைக்குவிற்கு 300க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.