கொரோனா வைரஸிற்கு முதல் பிரித்தானியர் பலி!

Report Print Murali Murali in சிறப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் பிரித்தானியர் ஒருவர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா தொற்றுக்குள்ளான பிரித்தானிய நாட்டுப் பிரஜை ஒருவருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த நபர் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்து இறந்த ஆறாவது பயணி என்று ஜப்பானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது பிரிட்டனில் 20 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணித்த நால்வருக்கு கொரோன தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவ‍ேளை கப்பலில் கொரோனா தொற்றுக்குள்ளாகாத பலர் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டும் உள்ளனர்.

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 700 க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் குழுவினருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.