கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார மையம் விடுத்துள்ள அதி உச்ச எச்சரிக்கை

Report Print Ajith Ajith in சிறப்பு

கொரோனா வைரஸ் தொடர்பில் உலக சுகாதார மையம் அதி உச்ச எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த தொற்றினால் ஈரானில் மாத்திரம் 210 பேர் பலியாகியுள்ள நிலையிலேயே உலக சுகாதார மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஏற்கனவே சீனாவில் இந்த தொற்றினால் 2500க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அத்துடன் புதிதாக பலர் இந்த தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தாக்கத்தினால் சர்வதேச நாடுகளில் பங்கு சந்தைகளில் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இரண்டு இலங்கையர்கள் நேற்று அங்கொட தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.