கொரோனா வைரஸிற்கு முதல் அமெரிக்கர் பலி!

Report Print Murali Murali in சிறப்பு
218Shares

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதல் அமெரிக்கர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா உள்பட 50க்கும் மேற்பட்ட உலக நாடுகள் தங்கள் நாட்டில் கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று உண்டாகியுள்ளதை உறுதி செய்துள்ளன.

ஆசிய, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதை ஆப்ரிக்க நாடான நைஜீரியாவும் உறுதி செய்துள்ளது.

அத்துடன், தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் மின வேகமாக இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், சீனாவை தாண்டி வெளிநாட்டிலும் இந்த வைரஸ் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில், தற்போது குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்ட அமெரிக்க பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸினால் உயிரிழந்த முதல் நபர் இவராவார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பில் உலக சுகாதார மையம் அதி உச்ச எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

இந்த தொற்றினால் ஈரானில் மாத்திரம் 210 பேர் பலியாகியுள்ள நிலையிலேயே உலக சுகாதார மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.