கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையின் தற்போதைய நிலவரம்!

Report Print Murali Murali in சிறப்பு

இத்தாலி, சீனா போன்ற கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து நாட்டிற்கு வந்துள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் எவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்படவில்லை.

எனினும், 14 இலங்கையர்களும் இரண்டு வெளிநாட்டினரும் நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக, தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், காய்ச்சலுடன் பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து வயது குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, மூன்று இலங்கையர்கள் மற்றும் இரண்டு வெளிநாட்டினர் அங்கொட IDH வைத்தியசாலையிலும், கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் ஒருவரும், அநுராதபுர போதனா வைத்தியசாலையில் ஒருவரும், குருநாகல் போதனா வைத்தியசாலையில் ஒருவரும், இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்ட வைத்தியசாலைகளில் தலா இருவருமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவில் 3,390 ஆக உயர்ந்ததுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.