10ஆவது ஆண்டில் கால் பதிக்கும் லங்காஸ்ரீ வானொலியின் பிறந்த நாள் கொண்டாட்டம்...!

Report Print Banu in சிறப்பு

உலகத்தமிழர்களின் இதய துடிப்பாய் விளங்கும் லங்காஸ்ரீ வானொலி , இன்றைய தினம் தனது 10ஆவது ஆண்டில் கால் பதிக்கிறது.

இணைய வானொலியில் புரட்சி செய்திட லங்காஸ்ரீ வானொலி 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி புரட்சிகரமான மாற்றத்துடன் உதயமாகியது.

புதிய கோணத்திலான நிகழ்சிகளையும், சிறப்பான சேவைகளையும் வழங்கி லங்காஸ்ரீ வானொலி இணைய வானொலிகளில் தனக்கான நிரந்தரமான இடத்தை எண்ணிலடங்காத நேயர்களின் துணையுடன் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இன்றைய தினம் லங்காஸ்ரீ கலையகத்தில் சிறப்பான முறையில் லங்காஸ்ரீ வானொலியின் 10 ஆவது பிறந்ததினம் கொண்டாடப்பட்டது.

இப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக இலங்கை பாடகர் மஹிந்தகுமார் கலந்துக்கொண்டதோடு லங்காஸ்ரீ ஊடக நிறுவனத்தின் முகாமையாளர்கள், ஊழியர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்திருந்தனர்.

நேயர்களாகிய உங்களின் ஆதரவோடு கடந்த 9 ஆண்டுகளில் கிட்டத்தட்ட கடந்த மூன்று ஆண்டுகளில் அபார வெற்றிக்கண்டுள்ளது என்பதனை இத்தருணம் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுவரைகாலமும் எமக்கான ஒத்துழைப்பை வழங்கிய நேயர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இனி வரக்கூடிய காலங்களில் உங்களுடைய அன்பையும், ஒத்துழைப்பையும் வழங்குமாறு லங்காஸ்ரீ வானொலி குடும்பம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

உலகெங்கிலும் பரந்து வாழும் பல இலட்சக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டு வீரம் கொண்டு வெற்றிநடை போடும் லங்காஸ்ரீ வானொலி நேயர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் என தமது வெற்றிப்பயணத்தில் தம்மோடு இணைந்து பயணிக்கும் அனைத்து இரசிகர்களுக்கும் லங்காஸ்ரீ வானொலி குழுவினர் நன்றி தெரிவித்தனர்.