கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Report Print Murali Murali in சிறப்பு

கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோய் என உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இயக்குநர் டெட்டிரோஸ் அதானோம் கெப்ரோயஸ் இதனை அறிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

கடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் தொற்று குறித்த பதிவுகளின் எண்ணிக்கை 13 மடங்கு அதிகரித்துள்ளது.

இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு தனிநபரும் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 4291 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானவர்கள் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் பரவிவருவது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம், நோய் பரவும் வேகமும் அதன் தாக்கத்தின் கடுமையும் எங்களை அச்சமடைய வைத்துள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.