தொழிலாளர்களை வெளிநாட்டுக்கு கடத்தியவர்களுக்கு தண்டனை!

Report Print Murali Murali in சிறப்பு
67Shares

மலேசியாவுக்கு சட்டவிரோதமாக இந்தோனேசிய தொழிலாளர்களை கடத்திய 5 ஆட்கடத்தல்காரர்களுக்கு இந்தோனேசியாவின் Batam மாவட்ட நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

இதில் நான்கு நபர்களுக்கு 16 மாதங்கள் சிறைத்தண்டனையும் ஒரு நபருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நபர்களின் செயல்கள் சமூதாயத்தை தொல்லை செய்வதாக அமைந்துள்ளதாகவும் சட்டவிரோதமாக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் செயலை தடுக்கும் அரசின் முயற்சிக்கு எதிராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர்களுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜேசியேல், “ இவர்களின் செயலை எதைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.