கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து வெளியான புகைப்படங்கள்! இத்தாலி தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Ajith Ajith in சிறப்பு
3805Shares

கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து இலங்கைக்கு வந்தவர்கள் என்று கூறப்பட்டு வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு உரியவர்கள் எவருமே இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தில் விசா பெற்றிருக்கவில்லை என்று இத்தாலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இத்தாலிய தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை இத்தாலியில் கொரோனா வைரஸால் மரணித்தவர்களை சமய முறைப்படி இல்லாமல் நிர்வாணமாக புதைப்பதாக இலங்கையின் ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை என்றும் தூதுரகம் தெரிவித்துள்ளது.

குறித்த மரண சடங்குகளின்போது பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது உண்மை.

எனினும் மரணமானவரின் வரையறுக்கப்பட்ட உறவினர்கள் இறுதிசடங்கின்போது அனுமதிக்கப்பட்டதாக இத்தாலிய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

மரணமானவர்கள் தனியான சவப்பெட்டிகளில் வைத்து தனித்தனியாகவே அடக்கம் செய்யப்பட்டனர்.

இதன்போது இத்தாலிய முறைப்படி அனைத்து சமய அனுஸ்டானங்களும், மரியாதைகளும் வழங்கப்பட்டன என்றும் இத்தாலிய தூதரகம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.