ஹன்டவைரஸ் என்பது ஒரு புதிய வைரஸ் அல்ல

Report Print Ajith Ajith in சிறப்பு
521Shares

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று நோயை உலகம் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில், 'ஹன்டவைரஸ்' என்ற வைரஸால் சீனாவில் ஒருவர் மரணமாகியுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கிலும் 16,000 க்கும் அதிகமான மக்களை காவுகொண்டுள்ளது. இன்னும் அது கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை, ஹான்டவைரஸ் ட்விட்டரில் முதன்மையான செய்தியாக மாறியது. சீன அரசு ஊடகங்கள் நாட்டில் ஒருவர் வைரஸ் காரணமாக மரணமானதைப் பற்றி ட்வீட் செய்தன

எனினும் ஹான்ட வைரஸ் ஒரு புதிய வைரஸ் அல்ல, பல தசாப்தங்களாக மனிதர்களுக்கு தொற்றை ஏற்படுத்தி வருகிறது என்று கூறியுள்ளன.

சீன அரசாங்கத்தின் ஆங்கில செய்தித்தாளான குளோபல் டைம்ஸ், தமது ட்விட்டரில் "யுன்னன் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த திங்களன்று ஒரு பேருந்தில் வேலைக்காக சாண்டோங் மாகாணத்திற்கு திரும்பும் போது மரணமானதாக தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஹன்டவைரஸினால் அவர் மரணமானார் என்பது உறுதிப்படுத்திப்பட்டது. இந்தநிலையில் பேரூந்தில் இருந்த 32 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஹன்டவைரஸ் என்றால் ஒரு புதிய வைரஸ் அல்ல. அமெரிக்காவின் உயிரியல் ஆய்வு மையத்தகவல்படி, ஹான்டவைரஸ் இனத்தில் 21 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1978ம் ஆண்டில், தென் கொரியாவின் ஹன்டன் ஆற்றின் அருகே சிறிய நோய்த்தொற்றுடைய வயல் பகுதியில் இருந்து இது ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹன்டன் ஆற்றுக்கு அருகில் ஆரம்பமானதால் இந்த வைரஸூக்கு ஹன்டான் வைரஸ் என்று பெயரிடப்பட்டது. கொரியப் போருக்குப் பின்னர் (1951-1953) இந்த கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் போது ஐக்கிய நாடுகள் சபையின் சுமார் 3000 துருப்புக்களிடையே இரத்தக்கசிவு காய்ச்சல் போன்ற தன்மைகள் இந்த நோயின் காரணமாக ஏற்பட்டன.

1981ம் ஆண்டிலேயே "ஹன்டாவைரஸ்" என்று அழைக்கப்படும் ஒரு புதிய வகை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சிறுநீரக நோய்க்குறி (எச்.எஃப்.ஆர்.எஸ்) காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்கள் அடங்கும்.

இது எலிகளால் பரப்பப்படுகின்றன. காய்ச்சல், கடுமையான தசை வலிகள் சோர்வு உட்பட்ட குணங்குறிகள் இதன்போது தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.