அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது! உலக சுகாதார மையம் எச்சரிக்கை

Report Print Ajith Ajith in சிறப்பு

கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் மிக வேகமாக தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா நாடு தொற்று நோயின் மையமாக மாறலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாகிஸ்தானில் 878 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பங்களாதேஸில் 3 பேர் உயிரிழந்தனர். 33பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தோனேசியாவில் 19 பேர் மரணமாகினர். தாய்லாந்தில் 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் ஸ்பெய்னில் நேற்று ஒருநாளில் மாத்திரம் 514 பேர் மரணமாகினர்.

இத்தாலியில் நேற்று வரை 7000 பெர் கொரோனாவினால் காவுகொள்ளப்பட்டனர்.

இதேவேளை அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.