கொரோனா வைரஸ்! சிவப்பு அபாய வலயமாக பேருவளை அறிவிப்பு

Report Print Murali Murali in சிறப்பு

களுத்துறை - பேருவளை பகுதி கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் சிவப்பு அபாயம் கொண்ட பகுதியான அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருவளை சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் வருண செனவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அங்கு சுமார் 206 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட 135 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் களுத்துறை மாவட்டத்தில் மொத்தம் 13 கொரோனா வைரஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டதோடு அவர்களில் 07 பேர் பேருவளையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருவளை நகர் ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பிரயாணிகள் அதிகமாக வரும் பகுதி என்பதோடு இந்தியா, சிங்கப்பூர், கொரியா, டுபாய், மடகஸ்கார் போன்ற நாடுகளிலிருந்து அதிகமானவர்கள் வந்து வசிக்கின்ற பகுதியாகவும் காணப்படுகின்றது.

Latest Offers

loading...