இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தலுக்கு செல்லாத ஆறு பேர் கண்டுபிடிப்பு!

Report Print Ajith Ajith in சிறப்பு

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாமல் இருந்து வந்த ஆறு பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆறு பேரும் தற்போது தனிமைப்படுத்தல் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே 12 பேர் இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் இருந்து மறைந்திருப்பதாக காவல்துறை குறிப்பிட்டிருந்தது.

எனினும் அதில் ஒரு பெண் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வந்து பின்னர் திரும்பிச் சென்றமை தெரியவந்தது.

இந்த நிலையிலேயே அதில் 6 பேர் தற்போது தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.