கொரோனா தொற்று அச்சம்! கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மூடப்படுகின்றன

Report Print Ajith Ajith in சிறப்பு

கொழும்பில் அமைந்துள்ள, குறைந்தது மூன்று, ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மார்ச் 31ம் திகதி முதல் மூடப்படவுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல்கள் 10 அறைகளுக்கும் குறைவான அளவில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை களுத்துறையில் அமைந்துள்ள விருந்தகங்களில் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகள் தொடர்ந்தும் விருந்தகங்களுக்குள்ளேயே இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் இருந்து 13 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவின் தகவல்படி களுத்துறையில் சுமார் 900 சுற்றுலாப்பயணிகள் தங்கியுள்ளனர்.