கொரோனா வைரஸ் தொற்றுடன் இன்று எவரும் அடையாளம் காணப்படவில்லை! சுகாதார அமைச்சு

Report Print Rakesh in சிறப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இன்று மாலை 6 மணிவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று மாலை வரையில் இலங்கையில் மொத்தமாக 102 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 99 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

255 பேர் வரையில் இந்த நோய்க்கான அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகலாவிய ரீதியில் 452,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், உயரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 20 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.