தனிமைப்படுத்தப்பட்டிருந்த தென்கொரிய நாட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்!

Report Print Murali Murali in சிறப்பு
136Shares

தனிமைப்படுத்தல் பணியை வெற்றிகரமாக முடிந்த 10 பேர் அடங்கிய தென்கொரியா நாட்டை சேர்ந்த குழுவினர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தங்கொட்டுவ சுகாதார அலுவலர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. இந்த குழுவினர் கடந்த 8ம் திகதியிலிருந்து தங்கொட்டுவ பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தனிமைப்படுத்தப்படிருந்தனர்.

இத்தாலி, தென் கொரியா மற்றும் ஈரானில் இருந்து வரும் பயணிகளை மட்டக்களப்பு மற்றும் கந்தகாடு ஆகிய இடங்களில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பத் தொடங்குவதற்கு முன்பே இந்த குழு நாட்டிற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே, தனிமைப்படுத்தல் பணியை வெற்றிகரமாக முடிந்த குறித்த 10 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் காலத்தை முடித்த மேலும் 208 பேர் இன்று காலை விடுவிக்கப்பட்டிருந்தனர்.

முன்னதாக நேற்றும், பொலனறுவை - கந்தகாடு மற்றும் மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்த 311 பேர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.