21 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை! கொரோனா வைரஸ் குறித்த தற்போதைய நிலை

Report Print Murali Murali in சிறப்பு

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில், குறித்த வைரஸினால் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த டிசெம்பர் மாதம் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள 180க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்று காரணமாக 21 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 466,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 331,000க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 113,000க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் மாத்திரம் 7500 பேர் வரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தாலிக்கு அடுத்ததாக ஸ்பெயின் நாட்டிலேயே கொரோனா காரணமாக அதிகளவான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதுடன் அங்கு 3 ஆயிரத்து 647 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் 3 ஆயிரத்து 287 பேர் உயிரிழந்துள்ளதுடன் அங்கு புதிதாக 67 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா காரணமாக ஈரானில் 2 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் கொரோனா காரணமாக ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா காரணமாக ஆயிரத்து 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் அங்கு புதிதாக 156 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் 465 பேர் உயிரிழந்துள்ளனர். ஜேர்மனியில் 206 பேர் உயிரிழந்துள்ளனர். சுவிட்ர்லாந்தில் 465 பேர் உயிரிழந்துள்ளனர். நெதர்லாந்தில் 356 பேர் உயிரிழந்துள்ளனர். பெல்ஜியத்தில் 178 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவில் 131 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒஸ்ரியாவில் 31 பேரும், கனடாவில் 36 பேரும்,போர்த்துக்கலில் 43 பேரும்,நோர்வேயில் 14 பேரும், அவுஸ்திரேலியாவில் 12 பேரும், பிரேசிலில் 59 பேரும், சுவிடனில் 62 பேரும், துருக்கியில் 59 பேரும், இஸ்ரேலில் 5 பேரும், மலேசியாவில் 20 பேரும், டென்மார்கில் 34 பேரும், அயர்லாந்தில் 9 பேரும், லக்சம்பேர்கில் 8 பேரும், ஜப்பானில் 45 பேரும், ஈக்குவடோரில் 29 பேரும்,சிலியில் 3 பேரும், பாகிஸ்தானில் 8 பேரும், போலந்தில் 14 பேரும், ரோமேனியாவில் 17 பேரும், தாய்லாந்தில் 4 பேரும், கிறீசில் 22 பேரும், பின்லாந்தில் 3 பேரும், சவுதியில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு அடுத்ததாக இந்தோனேசியாவில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். பிரின்ஸ் டயமன்ட் கப்பலில் 10 பேரும், இந்தியாவில் 12 பேரும், பிலிப்பைன்சில் 38 பேரும், சிங்கப்பூரில் 2 பேரும், பனாமா மற்றும் ஆர்ஜன்டீனாவில் தலா 8 பேரும் ஈராக்கில் 29 பேரும், அல்ஜீரியாவில் 21 பேரும், எகிப்தில் 21 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மொத்தமாக உலகம் முழுவதும் இதுவரை 21 ஆயிரத்து 294 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் குறித்த தற்போதைய தகவல்கள் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்....