கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின எண்ணிக்கை 106ஆக அதிகரிப்பு!

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளது. இன்று மாலை இரண்டு தொற்றாளிகள் புதிதாக கண்டறியப்பட்டனர்.

இதன் பின்னர் இன்று இரவு மேலும் இரண்டு தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர். இதன் அடிப்படையியே கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுடன் மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்! சுகாதார அமைச்சு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த டிசெம்பர் மாதம் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள 180க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்று காரணமாக 22 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 491,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கையிலும், கொரோனா வைரஸ் தொற்று பரவியிருந்த நிலையில், நேற்று முன்திம் வரையில் 102 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

எனினும், கடந்த 24ம் திகதி மாலை 4.30 மணியிலிருந்து இன்று மாலை 5 மணி வரையில் கொரோனா தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையிலேயே, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் நான்கு பேர் குணமடைந்த நிலையில், இன்று வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.